search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி உரை"

    • இடைக்கால பட்ஜெட் தாக்கப்பட இருக்கும் நிலையில் இன்று ஜனாதிபதி உரையாற்றினார்.
    • ஜனாதிபதி உரையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இடம் பிடித்திருந்தது.

    மத்திய இடைக்கால பட்ஜெட் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உரையில் பல்வேறு விசயங்களுடன் ராமர் கோவிலும் இடம் பிடித்திருந்தது.

    ஜனாதிபதி உரையில் ராமர் கோவில் இடம் பிடித்த நிலையில், அவரது உரை குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி உரை குறித்து சதி தரூர் கூறுகையில் "பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை தேர்தல் உரையாக எழுதி உள்ளனர். இது ஒருதலைப்பட்சமானது ஆகும். பல முக்கியமான விசயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது அதுபற்றி யோசிக்க வேண்டும்" என்றார்.

    காங்கிரஸ் எம்.பி. சக்தி சிங் கோஹில் கூறுகையில் "10 வருடத்திற்கு முன் பிரதமர் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், ஒன்றையும் நிறைவேற்றவில்லை.

     அவர்கள் செய்துள்ள பணிகளை வைத்துக் கொண்டு மக்களிடம் வாக்கு கேட்க செல்ல முடியாது. ஆகவே வாக்கிற்காக ராமர் கோவிலை பயன்படுத்துகிறார்கள்.

    காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கூறுகையில் "ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் ராமர் கோவிலை பயன்படுத்தும்போது, சோனியா காந்தி வரவேற்றார்.

     ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை" என்றார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் "ஜனாதிபதி உரை பிரதமர் மோடி மற்றும் அவரது அரசை பாராட்டியே இருந்தது. பிரதமர் மோடி மற்றும் அரசியல் உரைக்கான பிரசாரம், விளம்பரம்.

    ஜனாதிபதி உரையில் வேலைவாய்ப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. ஏழைகளை சிக்கவைப்பதற்கான ஆவணம்தான் இது" என்றார்.

    ×